×

கால்நடை தீவனங்கள் விலை உயர்வு : நஷ்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்போர்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் கால்நடை தீவன விலை உயர்வால் கறவை மாடுகள் வளர்ப்போர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தேவதானப்பட்டி,  மஞ்சளாறு அணை கிராமம், காமக்காபட்டி, கெங்குவார்பட்டி, அட்டணம்பட்டி,  புல்லக்காபட்டி, சில்வார்பட்டி, தர்மலிங்கபுரம், நாகம்பட்டி,  நல்லகருப்பன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, முதலக்கம்பட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட இடங்களில் கறவை மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு, கிடைமாடுகள், தொழுமாடுகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டுகின்றன.

இதில் அதிகப்படியாக கறவைமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது கடுமையான வெயிலால் நிலத்தடிநீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் கறவைமாடுகளுக்கு பருத்தி விதை, பருத்திவிதை புண்ணாக்கு, குச்சி புண்ணாக்கு, கம்பு, சோளம் உள்ளிட்ட பொருட்களின் விலை இரு மடங்கு  உயர்ந்துள்ளது.இதனால் பால் வருமானத்தைவிட மாட்டுத்தீவன கொள்முதல் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு மற்றும் கால்நடை தீவன விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர்  தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Raising Milk Cattle , Cattle, fodder, dairy cows
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...