கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடுசெலுத்துதல் திருவிழா : உடல் முழுவதும் சகதி பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடுசெலுத்துதல் திருவிழா நடந்தது. கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி பூச்சசொரிதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி அக்கினிக்காவடி விழா நடைபெற்றது. பின்னர் கடந்த 24ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டது. பின்னர் 25ம் தேதியிலிருந்து கொன்னைப்பட்டி, மூலங்குடி, ரெட்டியபட்டி, காட்டுப்பட்டி ஊரார்கள், எழுபது மொட்டையா கோனார்கள், பொன்னமராவதி, செம்பூதி, ஆலவயல் ஆகிய ஊரார்கள், நகரத்தார்கள், இடங்கை வலங்கை, மேலமேலநிலை,மலம்பட்டி,தேனூர் ஆகிய ஊரார்கள்,அரண்மனையாளர்கள்,ராங்கியர்,கொன்னைப்பட்டி ஊரார்,புஜகர்கள்,  பேட்டையார் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய மண்டகப்படி நடைபெற்றது.

மண்டகப்படி நாட்களில் இரவு சுவாமி விதிவுலாவின் போது பக்தர்கள் இருபுறமும் தீப்பந்தம் எந்தி ஊர்வலமாகச்சென்று வழிபாடு செய்தனர்.  8ம் தேதி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயில் முன்பு கிடாய் மற்றும் கோழிகள் வெட்டி பொங்கல் வைத்து வழிபாடுசெய்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாடுசெலுத்துதல் திருவிழாநேற்று (8ம் தேதி) நடந்தது. இதில் பொன்னமராவதி நாடு மிராஸ் ராஜாஅம்பலகாரர் தலைமையிலும், செவலூர் நாடு ஜெயச்சந்திரன் தலைமையிலும், ஆலவயல் நாடு மிராஸ் அழகப்பன் அம்பலம் தலைமையிலும், செம்பதி நாடு ராஜேந்திரன் தலைமையிலும் நான்கு நாடுகளின் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பு, ஈட்டி, பல்வேறு வேடமணிந்து தங்களது ஊரில் இருந்து கால்நடையாக சென்று நாடுசெலுத்தி வழிபாடு செய்தனர்.

மேலும் ஆலவயல் நாட்டில் நேர்த்தி கடன்களுக்காக உடலில் சகதி பூசி வருவது தனிச்சிறப்பாகும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வைரவன், பூசாரிகள், பணியாளர்கள் செய்திருந்தனர். பொன்னமராவதி டிஎஸ்பி. செந்தில்குமார்; தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொன்னையூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Konnayoor Muthuramaniyan ,festivals , Konnaiyur, muttumariyamman temple, devotees
× RELATED சாலை பாதுகாப்பு வாரவிழாவில் ஹெல்மெட்...