×

சென்னையில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடப்பதில் சிக்கல்..: 3 மாடங்கள் மூடப்பட்டுள்ளதால் அனுமதி அளிக்க பிசிசிஐ தாமதம்!

சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் திடீர் நிர்பந்தனையால் நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டி சென்னையில் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. தற்போதை அட்டவணையின்படி மே 12ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடத்தப்பட வேண்டும். ஆனால், மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே என்ற பார்வையாளர்கள் மாடங்கள் மீது தமிழக அரசின் தடை தொடர்வதால் அவைகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கட்டிட விதிகளை மீறி 3 மாடங்கள் கட்டப்பட்டுள்ளதால் கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி அவைகளுக்கு தடையில்லா சான்று வழங்க மறுத்து வருகிறது.

இதனால், சுமார் 12,000 வரை அமரக் கூடிய டிக்கெட்டுகள் வீணாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில், 3 மாடங்களை காலியாக வைத்துக்கொண்டு இறுதிப்போட்டியை நடத்த முடியாது என பி.சி.சி.ஐ நிர்வாக குழு அறிவித்துள்ளது. 7 நாட்களுக்குள் 3 மாடங்களை திறப்பதற்கான அரசு அனுமதியை பெற தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ஐதராபாத்தில் போட்டியை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால் மே 12ம் தேதி சென்னையில் இறுதிப்போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 7 ஆண்டு பிரச்சனை 7 நாட்களில் தீருமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. கடந்த முறை காவேரி பிரச்சனையால் சென்னையில் போட்டிகள் நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,Chennai ,BCCI ,closure , Chennai, IPL, final, BCCI, Chepauk Stadium
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி