×

அரசு திட்டத்தில் என்டிஆர் பெயரை நீக்கப்போவதாக ‘டி.வி’யில் பேட்டி: சந்திரபாபுவுக்கு மீண்டும் சிக்கல்

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர மக்களின் அபிமான தலைவருமான மறைந்த என்.டி.ராமாராவை அவமதிக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு அளித்த பேட்டியின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்டிஆரின் அபிமானிகளுக்கு ஆத்திரத்தையும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு கவலையையும் அளித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனியார் தெலுங்கு தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளருக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, என்டிஆர் ஆரோக்ய என்ற சுகாதார திட்டத்தில் உள்ள என்டிஆர் பெயரை நீக்கப் போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில், அந்த நலத்திட்டத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேட்டியில் கூறினாராம்.

தொலைக்காட்சி நேர்காணலுக்கு முன்னதாக, சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்விக்கு சந்திரபாபு அளித்த பதிலில்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது. “தலைமை செய்தியாளர், சந்திரபாபுவை பார்த்து, இந்த ஆரோக்ய திட்டம், மறைந்த ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அமலில் உள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த திட்டத்தில் உள்ள என்டிஆர் பெயரை எப்படி நீக்க முடியும்?’’ என்று கேட்டதற்கு மேற்கண்டவாறு சந்திரபாபு பதிலளித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களாகவும் மறைந்த என்டிஆரின் அபிமானிகளாகவும் உள்ளவர்கள் இந்த பேட்டியை பார்த்ததும், மிகுந்த கோபமும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

என்டிஆரின் முதுகில் குத்திதான் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினார். இப்போது, அவரை நினைவுப்படுத்தும் தடயங்களையும் அழிக்க முயற்சி செய்கிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஆவேசம் அடைந்துள்ளனர். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்த உரையாடல், அவருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவர் தம்மிடம் ஒரு லட்சம் கோடி இருப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் ஓட்டுகளை விற்பதாக இருந்தால், தனக்கே விற்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக செய்திகள் பரவின.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government plan, NTR, Chandrababu, problem
× RELATED கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா: துரை வைகோ மரியாதை