×

பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜ புதிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கை இல்லை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, புதிதாக கொடுத்திருக்கிற வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கை இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 ஐந்தாண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளில் மோடி எதையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிதாக வாக்குறுதிகளை பாஜக வழங்கியிருக்கிறது. இதை நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கை எவருக்கும் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
 ஏற்கனவே திட்டமிட்டபடி பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட முடியாத அளவிற்கு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் திக்குமுக்காடிப் போனதால் காலம் தாழ்த்தி தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் எந்த முயற்சியும் எடுக்காத பாஜக மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி கொடுப்பதற்கு என்ன தகுதியிருக்கிறது? ஐந்தாண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 10 லட்சம் வேலைகள் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற வாக்குறுதிகள் மீண்டும் கூறப்பட்டுள்ளன. இவை எவற்றையுமே 1998 முதல் 2004 வரை நடைபெற்ற வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலோ, 2014 முதல் 2019 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிற நரேந்திர மோடி ஆட்சிக்காலத்திலோ நிறைவேற்ற முடியவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan , Old Promise, Bhaj, New Promise, Confidence, Charges
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...