பொய் வழக்கில் கைது செய்த இன்ஸ்பெக்டருக்கு 50,000 அபராதம்

சென்னை:  தூத்துக்குடி மாவட்டம், சோனக்கன்வில்லை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் இருந்து 5 கி.மீ  தொலைவில் ஒரு கெமிக்கல் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு சுந்தரவடிவேல், தேவராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2012ம் ஆண்டு, எங்கள் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுனய்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியே வந்த டேங்கர் லாரி ஒன்று சுனய்குமார் மீது மோதி காயம் ஏற்பட்டது.  இதனையடுத்து லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் ₹5000 ஆயிரம் பணம் தருவதாக கூறினர்.

ஆனால் பணம் தரவில்லை, இதனை நான் கேட்டபோது, ஆழ்துளை கிணறு உரிமையாளர்களின் தூண்டுதலின் பெயரில் லாரி ஓட்டுனர் ஆறுமுகம் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் என்மீது புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெகடர் தில்லைநாகராஜன் வழக்கு பதிவு செய்து என்னை கிரிக்கெட் ஸ்டம்பு, லத்தியை கொண்டு பலமாக தாக்கி, சிறையில் அடைத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த  மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி துரை ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட  ரமேஷுக்கு அரசு ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த தொகையை அரசு இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூல் செய்துகொள்ள வேண்டும், என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஜோலார்பேட்டையில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு