எந்த பகுதிக்கு சென்றாலும் திமுகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது: தமிழச்சி தங்கபாண்டியன் பெருமிதம்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று காலை துரைப்பாக்கம் 195, 194 மற்றும் 193 ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு  சேகரித்தார். மாலையில் கொட்டிவாக்கம் 183வது வட்டத்திற்கு உட்பட்ட அண்ணா நகர், சத்யா நகர், எம்ஜிஆர் நகர், இளங்கோ நகர், விக்னேஸ்வரா நகர், சுவாமிநாதன் நகர், கொட்டிவாக்கம் குப்பம் சாலை, சிவன் கோயில் தெரு, கிழக்கு  கடற்கரை சாலை, அதனை தொடர்ந்து 185வது வட்டத்துக்கு உட்பட்ட பாலவாக்கம் கலைஞர் கருணாநிதி சாலை, பல்கலை நகர், வி.பி.ஜி.வெவின்யூ, பாலவாக்கம் குப்பம், அண்ணா சாலை, ஜெய்சங்கர் நகர், கோவிந்தன் நகர்,  திருவள்ளுவர் நகர், சந்தோஷ் நகர்,  பெரியார் சாலை ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து 192வது வட்டத்திற்கு உட்பட்ட சின்ன நீலாங்கரை குப்பம், மேட்டு காலனி, ரங்கா ரெட்டி கார்டன், நீலாங்கரை காலனி, சரஸ்வதி நகர் தெற்கு, ராஜேந்திரன் நகர், பாரதியார் நகர், பெரிய நீலாங்கரை குப்பம், ராஜா நகர்,  196வது வட்டத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஆசிரியர் காலனி, ராமலிங்கம் நகர், வெட்டுவாங்கேணி சாலை, பிஸ்மில்லா நகர், சின்னான்டி குப்பம், அனுமன் காலனி, ஈஞ்சம்பாக்கம் குப்பம், சோழமண்டல தேவி நகர், பெத்தேல்  நகர் தெற்கு, பெத்தேல் நகர் வடக்கு, ஈஞ்சம்பாக்கம் காலனி ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர்  விஸ்வநாதன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், பகுதி செயலாளர் மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் எம்.கே.ஏழுமலை, வட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:தொகுதிக்கு உட்பட்ட எந்த பகுதிக்கு சென்றாலும் மக்களிடையே திமுகவிற்கு நல்ல ஆதரவு உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே போல்  இங்கும் மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். குறிப்பாக மகளிர் ஆதரவு அதிகளவில் உள்ளது. இதுவே எங்களது வெற்றியை உறுதி செய்கிறது. கடும் வெயிலிலும் காத்திருந்து வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி  அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>