×

மெக்சிகோ டென்னிஸ் கார்பினி முகுருசா மீண்டும் சாம்பியன்

மான்ட்டெரி: மெக்சிகோவில் நடைபெற்ற அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்காவுடன் (பெலாரஸ்) மோதிய முகுருசா, முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அவர் 3-1 என்ற கணக்கில் முன்னிலை  வகித்தபோது, அசரென்கா காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அபியர்டோ ஓபனில் முகுருசா தொடர்ந்து 2வது முறையாக பட்டம் வென்று அசத்தினார்.நடப்பு சீசனில் அவர் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mexico ,carbini mukuruza , Mexican tennis, Carbini mucuruza, Champion,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...