×

வால்வோ கார் ஓபன் கோப்பை வென்றார் மேடிசன் கீஸ்

சார்ல்ஸ்டன்: அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடைபெற்ற வால்வோ கார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் டென்மார்க் நட்சத்திரம் கரோலின் வோஸ்னியாக்கியுடன் மோதிய மேடிசன் கீஸ், கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 7-6 (7-5) என்ற கணக்கில் போராடி வென்று முன்னிலை பெற்றார். அதே  வேகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய அவர், வோஸ்னியாக்கியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவரது 4வது சாம்பியன்
பட்டமாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madison Keys ,Volvo Car Open Cup , Volvo, Car open Cup, Won, Madison Keys
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் எலனா ரைபாகினா