×

அரசியலில் குதித்தால் வதோதராதான் வசதி ஓபராய் ஓபன் டாக்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகியுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.மோடி படம் ஏப்.5ம் தேதி திரைக்கு வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த படம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜ.வுக்கு சாதகமாக அமையும். எனவே படத்தை தேர்தல் நேரத்தில்  வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மனு அளித்தன. மேலும் தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தினர்.  இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தயாரிப்பாளர் சந்தீப்சிங் தன் டிவிட்டர் பதிவில் தேதி குறிப்பிடாமல் பட வெளியீட்டை தள்ளி வைத்ததாக அறிவித்தார்.

இந்தப் படம் தேர்தலுக்கு பின்னர் தான் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகிற 11ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். அன்று தான் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு   நடக்கிறது. எனவே வாக்குப்பதிவு அன்றே படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் பிஎம். நரேந்திரமோடி படத்தில் மோடி வேடத்தில் நடித்த விவேக் ஓபராய், ‘‘நான் அரசியலில் குதித்தால் 2024ல் குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியில் போட்டியிடுவேன்.’’ என்று கூறினார். பி.எம்.  நரேந்திரமோடி படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், ‘‘மோடியின் உடல்மொழி மற்றும் பேசும் முறையை கவனித்து நடித்தேன். இதற்கு 16 நாட்கள் ஆனது’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vadodara , politics, Vadodara , Oberoi, Open
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி