×

பெங்களூருவில் குடிநீர் குறைதீர் கூட்டம்

பெங்களூரு: பெங்களூரு, நாகரபாவி, அன்னபூர்ணேஸ்வரி நகர், சர் எம்வி லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளை  சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கட்டணம், அபராதம் உள்ளிட்ட பிரச்னை இருந்தால் நாகரபாவியிலுள்ள குடிநீர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் செய்யலாம்.   இது போல் ஜீவன்பீமாநகர்,  எச்.ஏ.எல்.  2வது ஸ்டேஜ்,  இந்திராநகர்,  பையப்பனஹள்ளி,  சதானந்தநகர் சேவை மையம் சார்ந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்திரா நகர் 10வது மெயின்ரோடு 7வது கிராசிலுள்ள குடிநீர் அலுவலக கத்திரிகுப்பே, ஹொசகெரேஹள்ளி, இட்டமடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பனசங்கரி 3 வது ஸ்டேஜிலுள்ள உதவி செயற்பொறியாளரிடம்  புகார் அளிக்கவேண்டும். குடிநீர் பிரச்னை, கட்டணம் உள்ளிட்ட புகார்களுக்கு குடிநீர் வினியோக உதவி மையத்தை (1916) அல்லது 080-22238888 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளகுடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bengaluru , Drinking water, Bengaluru
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...