×

கல்லூரி மாணவியை கொன்றது ஏன்? 2வது திருமணம் செய்ய டார்ச்சர் 10 பவுன் நகை கேட்டு மிரட்டினார்: கைதான பைனான்சியர் திடுக் வாக்குமூலம்

கோவை: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில் கைதான  பைனான்சியர் அளித்துள்ள வாக்குமூலத்தில் 2வது திருமணம் செய்து கொள்ளும்படி தன்னை டார்ச்சர் செய்ததாலும், 10 பவுன் நகை கேட்டு மிரட்டியதாலும் கழுத்தை அறுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மகள் பிரகதி (20). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை கழுத்தை அறுத்து கொலை செய்து, பொள்ளாச்சி அருகே சடலத்தை ரோட்டில் வீசி சென்றதாக கேரளாவை சேர்ந்த பைனான்சியர் சதீஷ்குமார் (29) ைகது செய்யப்பட்டார்.  இவரை போலீசார் பொள்ளாச்சி குற்றவியல் நீதிபதி ரேவதி முன் நேற்று ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 முன்னதாக சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் 9ம் வகுப்பு படித்திருக்கிறேன். எனக்கு எந்த தொழிலும் தெரியாது. கேரள மாநிலம் பாலக்காட்டில் பைனான்ஸ் நடத்தி வருகிறேன். எனது மாமன் மகள் தான் பிரகதி. சிறு வயதில் இருந்து அவளிடம் நான் பழகி வந்தேன். பள்ளி இறுதியாண்டு படித்த போது காதலிக்க துவங்கினேன். அவள் கேட்ட நகை, உடைகளை வாங்கி கொடுத்தேன்.  என்னை திருமணம் செய்துகொள்வாள் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் 4 ஆண்டிற்கு முன் எனக்கு வேறு ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழலாம் என நினைத்தேன். ஆனால் பிரகதி என்னை அடிக்கடி செல்போனில் அழைத்து அவளுடன் நான் உறவு வைத்திருந்ததை சுட்டி காட்டி மிரட்டி பணம், நகை கேட்டாள்.

 அவளது பெற்றோர், உறவினர் ஒருவரை அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். நிச்சயம் முடிந்த நிலையில், பிரகதி என்னிடம் 10 பவுன் தங்க நகை மற்றும் பணம் கேட்டாள். மேலும் அவள், திருமணம் நிச்சயம் செய்தவருடன் வாழ மாட்டேன், உன்னுடன் வந்து விடுகிறேன், என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள், உன் முதல் மனைவி, குழந்தையை விட்டு வந்து விடு எனக்கூறினாள். இதை நான் ஏற்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என நினைத்து கொண்டிருந்ேதன். சம்பவத்தன்று நான் கோவை சென்றேன். ேகாவையில் கல்லூரி விடுதியில் இருந்து பிரகதியை அழைத்து கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்ேதன்.

பூசாரிப்பட்டி அருகே சென்ற போது எனக்கும் பிரகதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரை நிறுத்தி விட்டு அவளிடம் தகராறு செய்தேன். அவளுக்காக ஏற்கனவே நான் பல லட்ச ரூபாய் செலவு செய்து கடனாளியாகி விட்டேன். அவளால் நான் குடும்பத்தை இழந்து விடுவேன் என்ற அச்சத்தில் அவளை தாக்கி காரின் பின் சீட்டில் தள்ளி கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தேன். அவளது பேண்டை கழற்றி விட்டு சடலத்தை தூக்கி வீசி விட்டு என் வீட்டிற்கு சென்று விட்டேன். எதுவும் தெரியாதது போல் நான் காட்டி கொண்டேன். ஆனால் எனது செல்போன் தொடர்பு, பிரகதியின் செல்போனில் நான் அடிக்கடி பேசியதை வைத்து அனைவரும் என்னை சந்தேகத்தினர். இதனால் நான் மாட்டி ெகாண்டேன். இவ்வாறு சதீஷ்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : college student ,financier , College student, 2nd marriage, tarcher, financier
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது