×

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முதல்வரும், ஸ்டாலினும் பரஸ்பரம் பேச வேண்டாம் : உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பரஸ்பரம் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.   நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசி வருவதாக கூறி,  மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த  மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பும், மு.க.ஸ்டாலின் தரப்பும் தங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி, கொடநாடு விவகாரம் தொடர்பாக பரஸ்பரம் முதல்வரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி விசாரணையை  புதன்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Stalin ,Kodanad , Do not interact ,chief and Stalin ,Kodanad murder
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...