×

முதல் தடவயா நீங்க?... ஓட்டு போட தெரியுமா? எலக்‌ஷன் சர்கார்

வாக்குச்சாவடிக்கு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரத்தை வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் “சுனோ பாத்சாலா” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு குழு வீதம் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் 14 முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 18 மற்றும் 19 வயதுள்ள வாக்காளர்கள், இளம் வயது பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், அந்தப் பகுதிகளில் உள்ள சமூகத்தின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். இவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான வாக்குச்சாவடி கல்வி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள அனைத்து  வாக்குச்சாவடிகளுக்கும் சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, வாக்குச்சாவடிக்கு சென்றவுடன் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்குப்பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு செய்த பிறகு விவி பேட் இயந்திரத்தில் எவ்வாறு அதை சரி பார்க்க வேண்டும் உள்ளிட்டவைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 3754 வாக்குச்சாவடிகளிலும் இந்த விழிப்புணர்வு முகாமை நடத்த சென்னை மாநகராட்சியின் கல்வி துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elixan Sarkar , how to vote, Elixan Sarkar
× RELATED சொல்லிட்டாங்க…