×

கடற்படை தளபதி நியமனத்தை எதிர்த்து ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு : நாளை விசாரணை!

புதுடெல்லி : கடற்படை தளபதியாக இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து துணை தளபதி பிமல் வர்மா ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்திய கடற்படையின் கிழக்குப்பகுதி தளபதியாக பொறுப்பு வகிக்கும் கரம்பிர் சிங், முன்னர் ஐ.எம்.எஸ்.டெல்லி, ஐ.எம்.எஸ்.ரானா கடற்படை தளங்களின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் கரம்பிர் சிங், அதி விஷிட் சேவா, பரம் விஷிட் சேவா உள்ளிட்ட சிறப்புக்குரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் நியமனத்தை எதிர்த்து ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் கடற்படை துணை தளபதி பிமல் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பணிமூப்பு அடிப்படையில் தளபதி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்காமல் கரம்பிர் சிங்கை நியமனம் செய்தது தவறு என தனது முறையீட்டில் பிமல் வர்மா குறிப்பிட்டுள்ளார். ராணுவத் தலைவர் பணிக்கு நியமனம் செய்யும் போது மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதே வெகுநாட்கள் வழக்கமாக இருந்தது.  

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கடந்த 2016ம் ஆண்டிலும் பணிமூப்பு அடிப்படை புறக்கணிக்கப்பட்டு ராணுவ தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெறும் பணிமூப்பு மட்டுமின்றி தனித்திறன் மற்றும் தகுதி அடிப்படையில் பிபின் ராவத் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்காததால் அதிகாரிகள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நாளை விசாரணக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Navy Chief ,Armed Forces Command Tribunal , Navy commander ,Armed Forces Administration Tribunal,Sunil Lanpa,Karampir Singh
× RELATED குன்னூர் நஞ்சப்பசத்திரம் மக்களை...