×

நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 5விவிபாட் இயந்திரங்கள் பொறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில், ஒரு தொகுதிக்கும் குறைந்தது 1-லிருந்து 5 விவிபாட் இயந்திரங்கள் பொருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு இயந்திர ஒப்புகைச்சீட்டில் 5% எண்ண உச்சநீதிமன்றம் உத்தரவு  விடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இயந்திரங்களில் பதிவான 5% ஒப்புகைச் சீட்டை என்ன வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 50% விவிபிஏடி சீட்டுகளை தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தலா ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள், ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்படுகின்றன. இது ஒட்டுமொத்த வாக்குகளில் 0.44 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் இந்த நடைமுறையின் நோக்கமே அடிபட்டு விடுகிறது.

எனவே வரும் மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் 50% வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டுமானால், வாக்கு எண்ணிக்கை நேரம் அதிகரிக்கும். இதனால் முடிவுகளை அறிவிக்க 5.2 நாட்கள் வரை ஆகும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் குறித்து வரும் 8-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதன்படி, எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்தால் முடிவுகளை அறிவிக்க 5.2 நாட்கள் வரை தாமதமானாலும் பரவாயில்லை. இந்த நாட்களை தேர்தல் நடைமுறை நாட்களுடன் ஒருங்கிணைக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது நம்பகத்தன்மை இல்லாமல் இந்தப் பிரச்சினையை எழுப்பவில்லை. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என பதிமனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த இந்த பதில் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்புகைசீட்டு இயந்திரம் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் அது துல்லியமாகவும், திருப்தியாகவும் இருக்கும் என கூறிய நீதிபதிகள், ஒரு தொகுதிக்கு குறைந்தது 1-லிருந்து 5 ஒப்புகைசீட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்த உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,election ,constituency , Vivipat Machines, Supreme Court, Parliamentary Election, Vol
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...