×

தமிழகத்தில் 75 மையங்களில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கியது: பயிற்சியாளர்கள் பற்றாக்குறையால் 338 மையங்கள் முடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி இன்று தொடங்கியது. 413 மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டிய நிலையில் 75 மையங்களில் மட்டுமே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9800 மாணவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது . ஆனால் நீட் மையங்களில் செய்து தரப்படும் கணினி வசதிகள், இணைய வசதிகள் உள்ளிட்டவற்றிற்காக, பள்ளிக்கல்வித்துறையின் 20 கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்கப்பெறாததால் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையால் மார்ச் 25ம் தேதி முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்றும் அறிவித்தது.

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கியது. ஆனால் 413 மையங்களில் செயல்படவேண்டிய நிலையில் வெறும் 75 மையங்களில் மட்டுமே இன்று பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பயிற்சியாளர்களை நியமிக்காத காரணத்தால் 338 மையங்களில் இன்னும் பயிற்சி ஆரபிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மார்ச் 25ம் தேதி தொடங்கப்பட வேண்டிய பயிற்சி மையங்கள் அரசின் நிதி உதவி கிடைக்காத காரணத்தால் தாமதமாக தொடங்கப்பட்டது. அரசின் நிதிஉதவி கிடைக்காத போதும் மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் பயிற்சியை தொடங்கியிருப்பதாக நீட் பயிற்சி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் மே 5ம் தேதி முதல் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அரசின் இலவச நீட் பயிற்சி மையம் 75 இடங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : centers , Neat Free Training, School Education, Coach, Deficit, Centers
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!