×

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு...... போலீசார் தீவிர விசாரணை

புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியார் சிலை நள்ளிரவில் மர்மநபர்களால் உடைக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. 1998-ல் வைக்கப்பட்ட இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


இதனையடுத்து இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Periyar ,statue break ,Aranthangi ,investigations , Aranthangi, Periyar statue, police, investigation
× RELATED பெரியாறு அணைப்பகுதியில்...