எத்தனை பேர் எதிர்த்தாலும் வெற்றி எனக்குதான்: கவிதா நம்பிக்கை

மக்களவை முதல்கட்ட தேர்தல் நாளான 11ம் தேதி, தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள நிசாமாபாத் தொகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும், முதல்வருமான சந்திர சேகர ராவின் மகள் கவிதா மீண்டும் போட்டியிடுகிறார். இப்போதும் அவர்தான் இங்கு எம்பி. ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு, மஞ்சள், கேழ்வரகுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம்சாட்டி, கவிதாவை எதிர்த்து 179 விவசாயிகள் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர்.  

இது குறித்து கவிதா கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதே போன்று 17 மக்களவைத் தொகுதிகளில் 16 இடங்களில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். விவசாயிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் பாஜ, காங்கிரஸ் ஆதரவாளர்கள். என்னை எதிர்த்து எத்தனை பேர் போட்டியிட்டாலும் கவலையில்லை. என் வெற்றி உறுதி ’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: