×

மனதை புண்படுத்தி விட்டார்: ஊர்மிளா மீது பாஜ வழக்கு

மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் டிவி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘உலகிலேயே மிகவும் வன்முறை மிகுந்த மதம் இந்து’’ என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி  நடிகை ஊர்மிளா மீது வழக்கு பதியக் கோரி பாஜ தொண்டர் சுரேஷ் நகுவா என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும், ஊர்மிளாவுக்கு இதுபோன்ற கருத்தை கூறும்படி சொல்லிக் கொடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும், ஊர்மிளாவை பேட்டி கண்ட பத்திரிகையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க அவர்  வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் பேட்டியில், ‘‘சிட்டிங் எம்பி பாஜ.வின் கோபால் செட்டியை விட ஊர்மிளாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதை பாஜ உணர்ந்து விட்டது. அதனால்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan ,Urmila , Fraudulent, Urmila, Bhajan, Case
× RELATED அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல்...