×

தமிழகத்துக்கு ஏராளமான வஞ்சகம் செய்துள்ள பாஜ: வைகோ தாக்கு

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வைகோ பேசியதாவது:
இந்த தேர்தல் ஜனநாயகமா, பாசிசமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கிற தேர்தல். பாஜகவினர் ஆட்சியை தக்கவைக்க எதையும் செய்ய துணிவார்கள். இங்கு பெரியாரை இழிவுப்படுத்தும் ஒரு நபர் போட்டியிடுகிறார். அவரை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள். வேலையில்லா திண்டாட்டம் வாட்டி வதைக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார் மோடி. 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை.
 
வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரும் என்றார், ரூ.15 கூட வரவில்லை. தமிழகத்திற்கு ஏராளமான வஞ்சகங்களை செய்துள்ளது பாஜக. கடந்த 2014ல் கர்நாடகாவை மேகதாது அணை கட்டி கொள்ளுங்கள் என்று ரகசியமாக சொன்னது பாஜக. காவிரி நீர் வராவிட்டால் டெல்டா மாவட்டங்கள் எத்தியோப்பியா நாடாகிவிடும். கஜா புயல் பாதிப்பில் 89 பேர் இறந்தனர். ஒரு வார்த்தைகூட மோடி அனுதாபம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : treachery ,attack ,Tamil Nadu , Tamilnadu, treachery, Bhajah, Vaiko, attack
× RELATED ‘இது என் திருப்பூர்…...