×

106 டிகிரியை தொட்டது சேலம் 6 மாவட்டங்களில் 105 டிகிரி வெயில்: வெயில் மேலும் அதிகரிக்கும்: அனல் வறுத்தெடுக்கும்

சென்னை: சேலத்தில் 106 டிகிரி 6 மாவட்டங்களில் நேற்று 105 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை நிலவிவருகிறது. கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதி நோக்கி வீசும் காற்றில் ஈரப்பதம் இல்லை என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இது தவிர தமிழகம், கேரளா, ராயலசீமா, தெலங்கானா பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தொடர்ச்சியாக வெயில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் தவிர உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சேலத்தில் 106 டிகிரி, தர்மபுரி, கரூர், மதுரை, பாளையங்கோட்டை, திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி, கோவை 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் சராசரியாக 98 முதல் 100 டிகிரி வரை வெயில் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்களி–்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகலில் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு வெயிலின் அரசு இயல்லை விட 2அல்லது 3 டிகிரி செல்சியஸ் (35.6-37.4) அதிகமாக இருக்கும். அதற்கு பிறகு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Districts ,Salem 6 ,Weil , 106 degrees, 105 degrees, warm, increasing, and thermal coughing
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 4...