×

ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

ஜெய்பூர்: ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் குவித்தது. கேப்டன் அஜிங்க்யா ரகானே 5 ரன், ஜோஸ் பட்லர் 37 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), திரிபாதி 6 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.  ஸ்டீவன் ஸ்மித் 73 ரன் (59 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் அறிமுக வீரர் ஹாரி கர்னி 2 விக்கெட், பிரசித் கிரிஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர்.  அடுத்து 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் களமிறங்கினர். தொடக்க ஜோடி அமர்க்களமாக ஆடியது.  இதில் 25 பந்துகளை சந்தித்த சுனில் நரேன் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 47 ரன்னில் அவுட்டானார். கிறிஸ்லைன் 50 ரன்னில் அவுட்டானார். 13.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kolkata ,Rajasthan Royals , Kolkata's, victory
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்