×

கார்களில் பறக்குது பரிசுபெட்டி: அமமுகவினர் நூதன பிரச்சாரம்

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அமமுகவினர் தங்களின் கார்களின் முன்பாகவும், காரை சுற்றியும் பரிசுப்பெட்டி சின்னத்தை பறக்கவிட்டவாறு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக, குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

நேர்மையான முறையில் தேர்தலை நடத்த டிடிவி.தினகரனுக்கு ஒரு பொதுசின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அமமுக கட்சி போட்டியிட பரிசுப்பெட்டி என்ற பொது சின்னத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால், ஆர்.கே.நகர் தேர்தலின் போது குக்கர் சின்னம் மிகவும் பிரபலம் அடைந்ததால் அந்த சின்னம் மீண்டும் கிடைக்கும் என்று நினைத்த அமமுகவினரின் கனவு பொய்த்துப்போனது. இதேபோல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சாத்தூர், திருவாரூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களின் பெயர்களில் உள்ளவர்களுக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து தொகுதிகளிலும் பரிசுப்பெட்டி சின்னத்தை எந்த வகையில் பிரபலம் அடையவைக்க முடியுமோ அந்த வகையிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அமமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால், பிரச்சார வாகனங்கள், வேட்பாளர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் முன்னும், பின்னும் பரிசுப்பெட்டி சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் பரிசுப்பெட்டியை தொங்கவிட்டவாறு அமமுகவினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பரிசுப்பெட்டிகள் பிரச்சாரத்திற்கு வரும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குக்கிராமங்களில் சின்னத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதால் பெட்டிக்கடைகளில் சிறிய அளவிலான பரிசுப்பெட்டியை அமமுகவினரே தயார் செய்து தொங்கவிட்டும் செல்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amateur , Car, fly, gift, ammunition, innovative campaign
× RELATED பாடி பில்டிங் போட்டியில் சிவகாசி மாணவன் சாதனை