×

பட்டேலால் பாஜ.வுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம்

குஜராத்தில் 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஜாதியை பொருட்படுத்தாமல் வேட்பாளர்களை நிறுத்திய பாஜ, இந்த தேர்தலில் ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் கிழக்கு மக்களவை தொகுதியில் எந்த பின்புலமும் இல்லாத பாலிவுட் நடிகர் பரேஸ் ராவல் 2014ம் ஆண்டு தேர்தலில் மோடி அலையால் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் அகமதாபாத் கிழக்கு தொகுதியில், அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பட்டேல் இனத்தை சேர்ந்தவரையே நிறுத்த வேண்டிய கட்டாயம் பா.ஜ.வுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் பட்டேல் இனத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிய படிதார் அனாமத் அந்தோலன் சமீதியின் உயர்மட்டக்குழு உறுப்பினரும் ஹர்திக் பட்டேலின் தோழியுமான கீதா பட்டேல் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட சி.கே.பட்டேல், பாலிவுட் நடிகர் மனோஜ் ஜோஷி, பா.ஜ. எம்எல்ஏ ஜகதீஷ் பஞ்சல், அகமதாபாத் நகர உள்ளூர் தலைவர்களாக ஜகதீஷ் பட்டேல், ஆசிட் வோரா ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த தொகுதியில் பட்டேல், பட்டியல் இனத்தவர்கள், மற்றும் குஜராத்தைச் சேராதவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தவிர முஸ்லிம், சிந்தி மற்றும் ஒபிசியினர் கணிசமாக உள்ளனர். இந்நிலையில் அம்ரேவாடி எம்எல்ஏ ஹஷ்முக் பட்டேல் (58) அகமதாபாத் கிழக்கு மக்களவை தொகுதிக்கு பா.ஜ. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்ரேவாடி சட்டமன்ற தொகுதி, அகமதாபாத் (மேற்கு) மக்களவை தொகுதிக்குட்பட்டதாகும். 1989ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 7 முறை அகமதாபாத் (கிழக்கு) தொகுதியில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த மக்களவை தேர்தலில் பட்டேல் இனத்தவரையே வேட்பாளராக நிறுத்தும் நிர்ப்பந்த நிலை பா.ஜ.வுக்கு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Patel ,BJP , Patel, BJP,
× RELATED முகவரி கேட்பதுபோல் நடித்து ஆட்டோவில்...