×

மோடிக்கு சசிதரூர் சவால் தில் இருந்தா... தமிழ்நாட்டுக்கு வாங்க

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பராம்பரிய தொகுதியான உபி மாநிலம் அமேதியோடு, 2வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டிலும் இம்முறை போட்டியிடுகிறார். இது குறித்து பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘அமேதியில் தோல்வி பயம் ஏற்பட்டதால்தான் ராகுல் வயநாட்டை நோக்கி ஓடுகிறார்’’ என்றார். காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசிதரூர், செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சசிதரூர் கூறியதாவது: வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதால், அடுத்த பிரதமர் தென்னிந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என அப்பிராந்தியத்தின் ஒட்டுமொத்த மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால், அமேதியில் இருந்து வயநாட்டுக்கு ராகுல் ஓடுவதாக கூறும் பாஜ மீண்டும் மீண்டும் தனது அற்பமான விடாப்பிடிதனத்தை பதிவு செய்கிறது. இந்த வார்த்தைகள் பிரதமர் மோடியிடம் இருந்து வருவதும் அதிருப்தி அளிக்கிறது. பாஜவின் பிடிவாதத்தை முன்னின்று வழிநடத்துவது மூலமாக, பிரதமர் பதவி என்பது அனைத்து இந்தியர்களுக்கும் இருக்க வேண்டுமென்ற கொள்கையை மோடி அலட்சியப்படுத்தி உள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் கூட்டாட்சி தத்துவத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ராகுல் வயநாட்டில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். இதன் மூலம் நாட்டின் வடக்கு -தெற்கு பகுதிகள் இடையே ஏற்பட்ட பிளவை சரிப்படுத்தும் பாலமாக இருப்பதாக அவர் உணர்த்தி உள்ளார். மேலும், வடக்கிலும், தெற்கிலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் ராகுல் கொண்டுள்ளார். இதுபோல் மோடியால் முடியுமா? தமிழ்நாட்டிலோ அல்லது கேரளாவிலோ ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிட தைரியம் இருக்கிறதா? இவ்வாறு சசிதரூர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Sasidharan ,Tamil Nadu , Sasi tharur, Modi, Tamil Nadu,
× RELATED தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில்...