×

பிரீத்தி ஜிந்தா விமானத்தில் ஏற நிறுவனம் அனுமதி மறுப்பு: மாஜி காதலனுக்கு சொந்தமானது

மும்பை: நடிகை பிரீத்தி ஜிந்தா கோஏர் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகை பிரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியில் பங்குதாரராக இருக்கிறார். இதில் அவரது முன்னாள் காதலன் நெஸ்வாடியாவும் பங்குதாரராக இருக்கிறார். இருவரும் காதலர்களாக இருந்தபோது பஞ்சாப் ஐ.பி.எல். அணியை விலைக்கு வாங்கினர். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நெஸ்வாடியா தன்னை மானபங்கம் செய்ததாக பிரீத்தி ஜிந்தா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். எனினும் அவர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். அணியில் பங்குதாரர்களாக இருக்கின்றனர். நெஸ்வாடியா குடும்பத்திற்கு கோஏர் விமான நிறுவனம் இருக்கிறது.

கடந்த 2 நாளுக்கு முன் பிரீத்தி ஜிந்தா சண்டிகரில் இருந்து மும்பைக்கு கோஏர் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தபோது விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறுது. ஆனால் இதை கோஏர் மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையில், ‘‘பிரீத்தி ஜிந்தா மார்ச் 30ல் கோஏர் மூலம் தான் சண்டிகர் சென்றார். திரும்ப வருவதற்கு ஏப்.2க்கு டிக்கெட் புக் செய்திருந்தார். ஆனால் அன்று அவர் பயணம் செய்யவில்லை. இது தொடர்பான வெளியான செய்தி கண்டனத்திற்குரியது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Priyadhi Zinta ,company ,Majhi , Priety Zinta, boyfriend
× RELATED அமைச்சர், கலெக்டருக்கு எதிராக கருத்து...