×

ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி கூறியதால் போலீஸ்காரரை தாக்கி சீருடை கிழிப்பு: டிரைவர் கைது

சென்னை: போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்திய ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி கூறியதால், ஆத்திரமடைந்த டிரைவர் ஒருவர், போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வடபழனி பேருந்து நிலையம் முன், பேருந்துகள் வெளியே செல்ல முடியாத வகையில் ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, வடபழனி காவல் நிலைய போலீஸ்காரர் லோகநாதன் (31) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர், போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்ட ஆட்டோவை ஓரமாக நிறுத்துமாறு அதன் டிரைவர் செந்தில்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், ஆட்டோ ஓரமாகத்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது.

நீங்கள், உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால், போலீஸ்காரருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் பொதுமக்கள் முன்பே கட்டிபுரண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து கொண்டனர். இதில் காவலர் லோகநாதனின் சீருடை கிழிந்தது. உடனே காவலர் வடபழனி காவல் நிலையத்தில், தன்னை பணி  செய்யவிடாமல் தாக்கியதாக டிரைவர் செந்தில்குமார் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் ஆட்டோ டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வடபழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policeman , Driver, arrested, policeman
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...