×

மண்டல் அறிக்கையை அமல்படுத்த வி.பி.சிங்கை வலியுறுத்தினேன்: புத்தகத்தில் லாலு தகவல்

புதுடெல்லி: வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என அவரை வலியுறுத்தினேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது அரசியல் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வெளியே வந்துள்ளன.

புத்தகத்தில் லாலு மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முயற்சி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:
1989ம் ஆண்டு தேசிய முன்னணி அரசு அமைக்கப்பட்ட பின்னர் பிரதமர் வி.பி.சிங் மற்றும் துணை பிரதமர் தேவி லால் இடையே புரிதல் இல்லாத சூழல் நிலவியது. இது தேசிய முன்னணி அரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்துவிடுமோ என நான் கவலைப்பட தொடங்கினேன். ஏனெனில் அவ்வாறு நடந்தால் பீகாரில் எனது அரசுக்கு அது ஆபத்தை விளைவிக்கும். வி.பி.சிங் ஆட்சியை தக்கவைக்க ஒரு சூத்திரத்தை கண்டறிந்தேன். 1990ம் ஆண்டு பிரதமரை சந்தித்தேன். நீங்கள் தேவி லாலுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் அல்லது உங்களது அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறினேன். விபி சிங் கூர்மையான அறிவு திறன் கொண்டவர்.

நல்ல அரசியல் உணர்வுகளை கொண்டவர். அப்போது வி.பி.சிங், “தேவி லால் ஜாட் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவர். நான் அவர் மீது நடவடிக்கை எடுத்தால், நான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானவன், ஏழைகளுக்கு எதிரானவன் என்ற கண்ணோட்டத்தை அவர் என் மீது பரப்பிவிடுவார்” என்றார். அப்போது நான், “ஒரு வழி இருக்கிறது மண்டல் கமிஷன் 1983ம் ஆண்டு தனது அறிக்கையை சமர்பித்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அந்த அறிக்கை கோப்பு உங்களது அலுவலகத்தில் தூசுபடிந்து கிடக்கிறது. அதனை உடனடியாக அமல்படுத்துங்கள். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு செய்தால் நீங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானவர் என தேவி லாலால் கூற இயலாது” என்றேன்.

ஆனாலும் சிங் தயக்கம் காட்டினார். எனினும் அவரை என்னால் ஏற்றுக்கொள்ள வைக்க முடிந்தது. பீகார் பவனுக்கு நான் கிளம்பிய பின்னர் வி.பி.சிங் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. கடைசியில் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. நான் பிரதமரை சந்தித்தது குறித்து சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்களுக்கு தெரியாது. இவ்வாறு புத்தகத்தில் லாலு கூறியுள்ளார். மேலும்  தனது புத்தகத்தில்  பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனான அன்பு-வெறுப்பான உறவு, மூத்த தலைவர்களுடனான உறவு உள்ளிட்டவை குறித்தும் லாலு பிரசாத் எழுதியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து பாஜ.வுக்கு தாவியது. அங்கு தாவிய சில மாதங்களில் மீண்டும் தன் கட்சியுடன் கூட்டணி வைக்க பீகார் முதல்வர் நிதிஷ் முயன்றார் என்று குற்றம்சாட்டியுள்ள லாலு, முதல்வர் நிதிஷை குரங்குடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டாக்டராக விரும்பினேன்:

லாலு பிரசாத் யாதவ் தனது புத்தகத்தில், “பள்ளியில் சேர்ந்தவுடன் நான்  மருத்துவராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் உயிரியல் படிக்க வேண்டும், ஆய்வகத்தில் தவளையை வெட்ட வேண்டும் என தெரிந்தவுடன் அந்த எண்ணத்தை கைவிட்டேன். அப்போது தான் அறிவியல் எனது கையில் இருக்கும் தேனீர் அல்ல என்பதை உணர்ந்தேன். அதே நேரத்தில் நான் அல்ஜீப்ராவையும் விரும்பவில்லை. பின்னர் தான் கலைக்கல்லூரி படிப்பை தேர்வு செய்ேதன். அதை நான் விரும்பி படித்தேன். ஏன் என்றால் அது சமூகம், விவசாயம், அரசியல் மற்றும் அடிப்படை சட்டங்களை இணைத்திருந்தது” என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VP ,Mandal Report: Lalu , Mandal, Report, VP Singh, Lalu, Information
× RELATED நாட்டில் பாஜகவின் செல்வாக்கு...