×

மெக்சிகோ டென்னிஸ் பைனலில் முகுருசா

மான்ட்டெரி: மெக்சிகோவில் நடைபெற்று வரும் அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) தகுதி பெற்றார்.அரை இறுதியில் ஸ்லோவகியாவின் மெக்தலினா ரிபாரிகோவாவுடன் மோதிய முகுருசா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருடன் (ஜெர்மனி) மோதிய விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி, 11 நிமிடம் போராடி வென்று இறுதிப்  போட்டிக்கு முன்னேறினார். பைனலில் முகுருசா - அசரென்கா மோதுகின்றனர்.

வோஸ்னியாக்கி முன்னேற்றம்: அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடைபெற்று வரும் வால்வோ கார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட டென்மார்க் நட்சத்திரம் கரோலின்  வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். அரை இறுதியில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சுடன் மோதிய வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு அரை இறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6 -4, 6-0 என்ற நேர் செட்களில் மோனிகா புயிகை (போர்டோ ரிகோ) வீழ்த்தினார்.இறுதிப் போட்டியில் வோஸ்னியாக்கி - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mugurauza, Mexico Tennis, tennis
× RELATED 2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி;...