×

லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் பார்சிலோனா தொடர்ந்து முன்னிலை: மெஸ்ஸிக்கு விருது

கேம்ப் நோ: ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில், அத்லெடிகோ மாட்ரிட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து  முன்னிலை வகித்து வருகிறது. கேம்ப் நோவில் நடைபெற்ற இந்த போட்டியின் 28வது நிமிடத்தில் அத்லெடிகோ மாட்ரிட் அணி வீரர் டீகோ கோஸ்டா சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெள்ளியேற்றப்பட்டதை அடுத்து அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட  வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எனினும், பார்சிலோனா வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளை அத்லெடிகோ மாட்ரிட் கோல் கீப்பர் ஜான் ஓப்லாக் அபாரமாக செயல்பட்டு முறியடித்தார்.

இதனால் கடைசி கட்டம் வரை இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன. போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்கள் லூயிஸ் சுவாரெஸ் (85வது நிமிடம்),  லியோனல் மெஸ்ஸி (86வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் அடிக்க, அந்த அணி 2-0 என வெற்றியை வசப்படுத்தியது.பார்சிலோனா அணி 31 லீக் ஆட்டத்தில் 73 புள்ளிகள் பெற்று ( 22 வெற்றி, 7 டிரா, 2 தோல்வி) தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் (62 புள்ளி), ரியல் மாட்ரிட் (60), ஜெடாபி (47), அலாவெஸ் (47) அடுத்த  இடங்களில் உள்ளன. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, கடந்த ஆண்டு லா லிகா சீசனின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்ட மெஸ்ஸி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : La Liga Football Championship ,Barcelona ,Messi , La Liga, Football ,Championship Barcelona, Messi's award
× RELATED கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில்...