×

அதிமுகவுடன் தான் கூட்டணி; ஆனால் பாஜவுக்கு நான் எதிர்ப்பு தான்: எம்எல்ஏ தனியரசு

1 நீங்கள், தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் மூவர் அணியாக செயல்பட்டு வந்தீர்கள், இப்போது அவர்கள் உங்களுடன் இல்லை. நீங்கள் அவர்களை கழட்டி விட்டதாக கூறப்படுகிறதே?நான் கழற்றி விட என்ன இருக்கிறது. மூவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தோம்; இப்போது, தமீமுன் அன்சாரி திமுக ஆதரவான நிலைபாட்டை எடுத்து இருக்கிறார். கருணாஸ் எந்த நிலையையும் எடுக்கவில்லை. கொங்குநாடு  இளைஞர் பேரவை அதிமுக ஆதரவு தெரிவித்து இருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவித்து இருக்கிறேன். அதிமுகவின் தோழமையாக பயணிக்கிறேன்.

 மக்கள் நலக் கோரிக்கைக்காக நாங்கள் 3 பேர் இணைந்து குரல் கொடுத்தோம். பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காகவும், ஜல்லிக்கட்டு பிரச்னை, சிறைவாசிகள் விடுதலை இது போன்ற பல்வேறு பொது  பிரச்சனைகளுக்கு இணைந்து சட்டமன்றம் உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்தோம். நாங்கள் முன்னெடுத்த கோரிக்கைகள் பல வெற்றி பெற்று இருக்கிறது. நாங்கள் இணைந்து பணியாற்றும் போது எடுத்த முடிவு  என்னவென்றால் தேர்தல் வரும் நேரத்தில் அவரவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களது தேர்தல் நிலைப்பாட்டை எடுக்கலாம். மக்கள் பிரச்சனை என்று வரும் போது, இணைந்து பணியாற்றுவோம் என்று தான் நாங்கள் இணைந்து  பணியாற்றினோம். இப்போது தேர்தல் என்பதால் 3 பேரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறோம்.

2 பாஜவை பல இடங்களில் விமர்சனம் செய்து இப்போது பாஜ உள்ள அதிமுக கூட்டணியை ஆதரிப்பது சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவது போன்று இருக்கிறதே?நான் அதிமுக கொள்கை கோட்பாடு என்கிற அடிப்படையில் தான் அந்த கட்சியுடன் கூட்டணி உறவு தொடர்கிறது. பாஜவுக்கும் தனியரசுக்கும் எந்த தேர்தல் உடன்பாடும் இல்லை. கொள்கை உடன்பாடும் இல்லை. தமிழகத்தில்  உள்ள கோரிக்கைக்கு மதிப்பளிக்காத மத்திய பாஜ அரசுக்கு நாங்கள் ஆதரிக்கவில்லை. நாங்கள் அவர்களை நிராகரிக்கிறோம் என்று தான் என்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக பிரதிபலித்து தான் வருகிறேன். பாஜ போட்டியிடும்  5 தொகுதிகளிலும் நான் வாக்கு கேட்கவில்லை.

மோடி பிரதமராக வேண்டும் என்று பேசமாட்டேன்; இதுவரை  பேசவில்லை. நான் என்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். அதிமுக சமூக நீதி கொள்கை, மதசார்பற்ற  நிலைகளிலும், ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது என்கிற அடிப்படையிலும், 9 ஆண்டுகாலம் ஆட்சியில் பங்ெகடுத்த, அந்த நட்புக்கு, அந்த தோழமைக்கு விசுவாசமாக இருந்து,  கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுகவை ஆதரிக்கிறேன்.

3 முதல்வர் எடப்பாடி உங்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளாரே?, அது உங்கள் மீதான சாதிய பாசமா இல்லை என்னக்காரணம்?ஜெயலலிதா இருந்த போது என் மீது பாசமாக இருந்தார். அப்போது அதிமுக உடனான நாங்கள் நட்பாக இருந்ததை எல்லோரும் வியப்பாக பார்த்தனர். எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கும், ஜெயலலிதா இருந்த காலத்தில்  இருந்த அதே நட்பும் உறவும் தான். என் சமூகத்தை சேர்ந்தவர், என் மண்டலத்தை சேர்ந்தவர், என்னை போன்று விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதற்காக சிறப்பு நட்பு உறவு இல்லை. ஜெயலலிதாவின் கனவை  நனவாக்குவதற்காக மக்கள் பணியாற்றுகிறோம் என்பதால் அந்த நட்பு உறவு தொடர்கிறது.

 துணை முதல்வர் ஓபிஎஸ்; அவரும் என் மீது பாசமாக உள்ளார். எதிர்க்கட்சி தலைவரும் பாசமாக உள்ளார். தனியரசு மீது எல்லா தலைவர்களும் பாசமாக, நேசமாக சட்டமன்ற உள்ளேயும், வெளியேயும் இருக்கிறார்கள்.  மக்களுக்கு எதிராக முடிவு எடுத்தால் கட்டாயம் தனியரசு குரல் கொடுப்பேன். அது போன்று எடப்பாடி அரசு செயல்படாததால் அந்த நட்பு இன்னும் தொடர்கிறது.

4 அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேருவதற்கு உங்களுக்கும் சிறப்பு கவனிப்பு நடந்ததா?எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் தான் தனியரசு இன்னும் பிரகாசமாக இருக்கிறார். தனிப்பட்ட கோரிக்கைக்காகவும், எனக்கு அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று ேகாரிக்கை வைத்ததில்லை. யாரிடமும்  எதிர்பார்த்து கேட்டு நான் நின்றதில்லை. தனியரசு ஒரு ரூபாய் அல்ல ஒரு பைசா கூட இந்த தேர்தலில் நான் யாரிடமும் கையூட்டாகவோ, ஆதரவுக்கான நிலையில், தனிப்பட்ட முறையில் இயக்கத்திற்காக நான் வாங்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alliance ,AIADMK ,MLA ,Bhajan , Alliance , AIADMK;, BJP, MLA Separate state
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...