×

இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டம்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத்  குரைஷி குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின்  வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய  வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினான்.

இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் பஸ்சில் இருந்த வீரர்கள் உடல் சிதறி  பலியாகி விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 41 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர். இதனையடுத்து பிரதமர்  நரேந்திர மோடி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி, கடந்த பிப்ரவரி  26-ம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதில் முஸாஃபராபாத் பாலகோட், சாக்கோதி  பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

12 மிராஜ் ரக விமாகங்கள் 1,000 கிலோ வெடிகுண்டுகள் வீசின. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஹிஸ்புல் முகாஜீதின்  அமைப்புகள் அழிந்துபோனதாகத் தகவல் வெளியாகியது. மேலும், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர். இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள  உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா  மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Foreign Minister ,Pakistani , India, attack, Pakistani Foreign Minister
× RELATED சொல்லிட்டாங்க…