கோவை மாணவி கொலை வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல்: மாணவியை பின் தொடர்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை: பொள்ளாச்சி  பூசாரிப்பட்டி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகளில் ஒரு தனிப்பட திண்டுக்கல் விரைந்துள்ளனர். கோவை கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் சிக்னல் அடிப்படையில் தனிப்படை திண்டுக்கல் விரைந்துள்ளனர். முன்னதாக கோவை தனியார் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐஜி உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.

பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை வழக்கில் 3 வாலிபர் கைது