×

இந்தோனேசியாவில் அதிகாலை 4.54 மணியளவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

தீடிரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததால் பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Indonesia , earthquake,Indonesia's magnitude , 4.54 am rose, 6.1,Richter scale
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்