×

அல்ஜாரி 6 விக்கெட் வீழ்த்தினார் மும்பை அசத்தல் வெற்றி

ஐதராபாத்: ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்சை வென்றது.ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸின் அனல் தெறிக்கும் பந்துவீச்சில் தடுமாற்றம் கண்டது. துவக்க வீரர் ரோகித் சர்மா (11) முகமது நபி சுழலிலும், டிகாக் (19), குருணல் பாண்டியா (6) ஆகியோர் சித்தார்த் கவுல் வேகத்திலும் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 7, இஷான் கிஷன் 17 ரன்னில் வெளியேற 65 ரன்னில் 5 விக்கெட் பறிபோனது.ஹர்திக் பாண்டியாவை (14) ரஷித்கான் வெளியேற்றினார். கடைசி கட்டத்தில் போலர்ட் அதிரடியாக 26 பந்தில் 46 ரன் (4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கவுல் 2, புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, முகமது நபி, ரஷித்கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் (15), பயர்ஸ்டோ (16) அதிக ரன் குவிக்கத்தவற, அடுத்து வந்த வீரர்கள் தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்னில் வெளியேறினர். அபாரமாக பந்துவீசி, வார்னர், ஷங்கர் (5), ஹூடா (20), ரஷித்கான் (0) விக்கெட்டை வீழ்த்திய  அல்ஜாரி ஜோசப், புவனேஸ்வர் குமாரை (2)  கிளீன்போல்டாக்கி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசியாக கவுல் (0) விக்கெட்டையும் ஜோசப் வீழ்த்த சன்ரைசர்ஸ் 17.4 ஓவரில் 96 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜோசப் 3.4 ஓவர் வீசி 1 மெய்டன் உட்பட 12 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumbai ,win , IPL T20, Mumbai, Sunrisers Team
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்