ஓபிஎஸ்சுடன் மோடி நெருக்கம்: கே.எஸ்.அழகிரி பகீர்

ஓ.பன்னீர்செல்வத்தினுடனான நெருக்கத்தை காட்டவே பிரதமர் மோடி  தேனிக்கு வருகிறார் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தேனியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனியில் ஏப். 12ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் பிரசார பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் செய்யக்கூடிய திட்டங்களை எடுத்துக்கூறுவதற்காக பிரசாரத்திற்கு வருகிறார்.  ஆனால், பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வத்தினுடனான நெருக்கத்தை காட்டவே தேனிக்கு  வருகிறார்.   ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்கும் விஷயத்தில் நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறதோ அதனை காங்கிரஸ் ஆதரிக்கும். விடுதலை செய்தாலும், காங்கிரஸ் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செல்லாது. காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் கர்நாடக அரசின் பரிந்துரையை மட்டும் மாநில கர்நாடக அரசு ஏற்றிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய இபிஎஸ், ஓபிஎஸ் அரசு மவுனம் சாதிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,OBS , OPS, Modi, KS Azhagiri
× RELATED சாவர்க்கர், மோடிக்கு அபிஷேங் சிங்வி பாராட்டு