×

பாஜ நிறுவன தினம்: தமிழிசை வாழ்த்து

சென்னை: பாஜ நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பாரதிய ஜனதா கட்சி என்ற கற்பகவிருட்சம் துவங்கி 39 ஆண்டுகள் ஆகிறது. 39 வருடங்களுக்கு முன்னால்  நாட்டின் நலனை முன்நிறுத்தி சுயநலம் துறந்து, இத்தேசத்தின் நலனே பெரிது என்று கருதிய புனித உள்ளங்களால் துவங்கப்பட்ட இக்கட்சி இன்று வரை அவர்களின் பாதையில், அவர்கள் வகுத்துத் தந்த கொள்கைகளிலிருந்து வழுவாமல், இன்று உலகின் மிகப் பெரிய கட்சியாக, 11 ேகாடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ள கட்சியாக, ேதசப்பற்று உள்ள எந்த குடிமகனும் உயர் பதவி வகிக்க முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் கட்சியாக, இன்று அகிலமே மதிக்கும் பிரதமரை கொண்ட  கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த கட்சியை இந்த அளவிற்கு உயர்த்த, பெருமை  சேர்க்க இரவு பகல் பாராது,  தேசத்தை  முன்னிறுத்தி உழைத்து கொண்டிருக்கும் நம் கட்சியின் சகோதர, சகோதரிகளுக்கு ஸ்தாபன  தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Bjp Enterprise Day, Tamilnadu
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...