×

இது நாட்டை காக்கும் கை இது வீட்டை காக்கும் கை: காங்கிரசில் சேர்ந்தார் சத்ருகன்

பாஜ எம்பி.யும், நடிகருமான சத்ருகன் சின்கா, நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநிலத்தின் பாட்னா சாஹிப் மக்களவை தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு வென்றவர் நடிகர் சத்ருகன் சின்கா. இவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா நடவடிக்கை மீது அதிருப்தி ஏற்பட்டதால் அவர்களை கடுமையாக தாக்கி பேசி வந்தார். இதனால், கட்சியில் அவர் கட்டம் கட்டப்பட்டார். அவருக்கு வழங்கிய முக்கியத்துவம் பறிக்கப்பட்டது. இத்தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாட்னா சாஹிப் தொகுதியை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு பாஜ ஒதுக்கியது.

இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த சத்ருகன் சின்கா, பாஜ நிறுவன தினமான நேற்று, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். ‘இருநபர் ராணுவம்’:  பிறகு சத்ருகன் அளித்த பேட்டியில், ‘‘பாஜ.வில் பேச்சு சுதந்திரம் இல்லை. அந்த கட்சியில் ஜனநாயகம் மறைந்து, சர்வாதிகார பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஒரு நபர் காட்சி, இரு நபர் ராணுவம் என்ற நிலைப்பாடே உள்ளது. அந்த கட்சியில் உண்மை நிலவரத்ைத பேசினால் எதிர்ப்பாளர்  என முத்திரை குத்துகிறார்கள். இதனால், நானும் எதிர்ப்பாளர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ள நியாய் திட்டம் நாட்டிலேயே இதுவரை இல்லாத சிறந்த திட்டமாக இருக்கும்’’ என்றார்.

தாவிய சில நிமிடத்தில் சீட்

காங்கிரஸ் கட்சி, மக்களவை தேர்தலில் போட்டியிடும் மேலும் 5 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் மூலம் காங்கிரஸ் இதுவரை 377 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில், பாஜவில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்காவுக்கு, பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை, அவர் இத்தொகுதியில் பாஜ சார்பில் நின்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்ேபாது இத்தொகுதியில் பாஜ சார்பில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். இதேபோல், இமாச்சல் மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ராம்லால் தாகூர் ஹமீர்பூர் தொகுதியிலும், பஞ்சாப்பின் கதோர் சாகிப் தொகுதியில் ஜஸ்பீர் சிங் கில் டிம்பாவும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அமர்சிங் பதேகார் சாகிப் (தனி) தொகுதியிலும், பரீத்கோட் தொகுதியில் நாட்டுப்புற பாடகர் முகமது சாதிக்கும் போட்டியிடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nation ,Sathurugan ,house ,Congress , This is the hand of the nation that handles the house: the Congress joined Sathrukan
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை