×

திமுக கூட்டணிக்கு ஆதரவு: திருக்கோயில் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்க தலைவர் லோகநாதன், பொதுச்செயலாளர் மணி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 40 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டுமனை வாடகை தாரர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகம் வழக்கம் போல் தொடர்ந்து இக்கூட்டணி வெற்றிக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாய் இருப்பது என்று முடிவெடுத்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 38,461 கோயில்களின் அடிமனை வாடகைதாரர்கள் மற்றும் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்யும் விவசாயிகள், கோயில் மனைகளில் குடியிருக்கும் கட்டிட வாடகைதாரர்கள் மற்றும் கடைகள் கட்டி வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைவரும் தம் குடும்பங்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து நமது வாக்குகளை அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Announcement ,alliance ,DMK ,Temple Housing Bankers Association , DMK Alliance, Support, Temple, Association, Announcement
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி