×

அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கன்னோஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல்

லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், தாம் எம்.பியாக உள்ள நாடாளுமன்ற தொகுதியிலேயே மீண்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அகிலேஷ் யாதவ் முதல்வரான பிறகு, 2012-ம் ஆண்டு கன்னோஜ் நாடாளுமன்ற தொகுதி காலியானது. இதையடுத்து, கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், அதே தொகுதியில் போட்டியிட்டு, வென்று, எம்.பியாக உள்ளார். இந்நிலையில், கன்னோஜ் தொகுதியில் போட்டியிட, டிம்பிள் யாதவ், இன்று மீண்டும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிகழ்வின்போது, அகிலேஷ் யாதவ், ஜெயா பச்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dimple Yadav ,Akhilesh Yadav ,constituency ,Kannoz , அகிலேஷ் யாதவ், மனைவி டிம்பிள் யாதவ், கன்னோஜ் தொகுதி , வேட்புமனுத்தாக்கல்
× RELATED அகிலேஷ் மனைவிக்கு ரூ.15 கோடி சொத்து