×

கொடைக்கானலில் குற்றுயிராக கிடக்கும் குணா மரப்பாலம் சரிசெய்யப்படுமா?

கொடைக்கானல்: கொடைக்கானல் குணா குகையில் உள்ள மரப்பாலம் சேமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு ஆண்டின் அநேக மாதங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். குறிப்பாக கோடைசீசனான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும். அதன்படி சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள குணா குகை முக்கியமான சுற்றுலாத்தலமாகும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிக்கு கட்டணம் செலுத்திதான் செல்ல முடியும். சமீபத்தில் சுற்றுலா பயணிகள் குணா குகையை பார்வையிட வசதியாக மரப்பாலம் அமைத்தது. தரமில்லாத பணியால் தற்போது மரப்பாலம் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக குணா குகை உள்பகுதியில் உள்ள மரப்பாலம் ஆடிய நிலையில் மிக மோசமாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் நலன் கருதி மரப்பாலத்தை சீரமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kuna ,Kodaikanal , Kodaikanal, Guna wood carp
× RELATED கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு