×

206 ரன் இலக்கை எட்டி கேகேஆர் அசத்தல் வெற்றி

பெங்களூரு: ஆர்சிபி அணியுடனான லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 206 ரன்கள் என்கிற கடினமான இல்லை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது.  எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக பார்திவ், கோஹ்லி களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தனர். பார்திவ் 25 ரன்னில் ராணா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து டி வில்லியர்ஸ் இணைந்தார். இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சருமாக விளாசித் தள்ள ஆர்சிபி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கோஹ்லி 31 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் டி வில்லியர்ஸ் 28 பந்தில் 50 ரன்னை எட்டினார். கோஹ்லி 84 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்தீப் யாதவ் சுழலில் அவரிடமே பிடிபட்டார்.

டி வில்லியர்ஸ் 63 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சுனில் நரைன் சுழலில் ஷுப்மான் கில் வசம் பிடிபட்டார். ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 28 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), மொயீன் அலி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், கிர்ஸ் லயன் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே நரைன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த வந்த உத்தப்பாவும், லயனும் பங்காளி ஆட்டம் ஆடி ரன்களை வேகமாக உயர்த்தினர். ஸ்கோர் 93 ஆக உயர்ந்தபோது, உத்தப்பா(33) நெகி பந்தில் சவுதியிடம் கேட்ச் ஆகி வெளியேனார். அதன்பின்னர் கிரிஸ் லயனும் அவரை தொடர்ந்து ராணா, மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், 3.1 ஓவர்கள் மீதமிருக்க ரஸ்ஸல் களமிறங்கி மிரட்டினார். ரஸ்ஸல் 13 பந்துகளில் 7 சிக்சர், 1 பவுண்டரி விளாசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதனால் நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அட்டகாசமான வெற்றியை ருசித்தது. ஆர்சிபி அணி இந்த போட்டியில் 200க்கும் அதிகமான ரன் அடித்தும் மீண்டும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தது.  ஆட்டநாயகன் விருதை ரஸ்ஸல் தட்டிச் சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KKR , KKR ,rcb,ipl
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...