×

வியாபாரியை ஏமாற்றி கொள்ளை போலி ஐடி அதிகாரிகள் உள்பட 3 பேர் சிக்கினர்

அம்பத்தூர்: கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (62). இவர், தனது வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2ம் தேதி மாலை, சிவப்பிரகாசம் வீட்டிற்கு காரில் வந்த 5 பேர், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி, அவரது வீட்டை சோதனை செய்து 3 லட்சம், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 2 செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து சிவப்பிரகாசம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, தனது வீட்டிற்கு வந்தவர்கள் போலி அதிகாரிகள் என தெரியவந்தது. புகாரின்படி, கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த முருகன் (35), பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த செல்வகுமார் (46), கொரட்டூர் போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தீனதயாளன் (52) ஆகியோர், ஐ.டி., அதிகாரிகள் போல் நடித்து, கொள்ளையடித்தது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10ஆயிரம், 2 செல்போன்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : burglary ,ID ,businessman , Businessman, robbery, bogus IT officials
× RELATED மதுரை வாகன சோதனையில் சிக்கிய ரூ.18 கோடி...