×

புலிகளுடன் நடந்த போரின்போது தமிழர்களிடம் கையகப்படுத்திய 90 சதவீத நிலங்கள் ஒப்படைப்பு: அதிபர் சிறிசேனா தகவல்

கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின்போது, இலங்கை தமிழர்களிடம் இருந்து ராணுவம் கையகப்படுத்திய நிலங்களில் 90 சதவீதம் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக  அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 2009ல் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கு இறுதிப் போர் நடந்தது. இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். போரின்போது, இலங்கை அரசு அலுவலகங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தமிழர்களின் நிலப்பகுதிகளை கையகப்படுத்த இலங்கை அரசு முடிவு செய்தது.  இதன்படி, இந்த போருக்கு பின்பு, கடந்த மார்ச் புள்ளி விவரத்தின்படி, தமிழர்கள் வசம் இருந்த 84,675 ஏக்கர் நிலங்களை இலங்கை ராணுவம் கையகப்படுத்தியது. இதில் 71,178 ஏக்கர் நிலங்கள் தமிழர்கள் வசம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இன்னும் 13,497 ஏக்கர் நிலங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 11,039 ஏக்கர் நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என, அதிபர் மைத்ரிபால சிறிசேனா அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 475 ஏக்கர் நிலம் விரைவில் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.  அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் வர இருக்கிறது. அப்போது தமிழர்களின் ஆதரவு கிடைப்பதற்கான முயற்சிகளில் மைத்ரிபால சிறிசேனா ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், தமிழர்கள் வசம் நிலங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,war ,Tamils ,LTTE , Tamils, President Sirisena
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...