×

மெக்சிகோ டென்னிஸ் கால் இறுதியில் முகுருசா

மன்டெர்ரி: மெக்சிகோவில் நடைபெறும் அபியர்டோ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார்.
இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மார்கரிடா கஸ்பர்யானுடன் மோதிய முகுருசா 6-3, 6-7 (1-7), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 39 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 2வது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கரோலினா முசோவாவை (செக்.) வீழ்த்தினார். பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா, பிரான்சின் கிறிஸ்டினா மிளாடெனோவிச் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mexican ,tennis quarter , Mexican tennis , Mugura
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்