×

ட்வீட் கார்னர்... எப்படி வளர்ந்துட்டே!

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரன் இருவரும் தற்போது ஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகின்றனர்.டெல்லி அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் கிறிஸ் கேல் காயம் காரணமாக விளையாட முடியாததால் அவருக்கு பதிலாக இளம் வீரர் சாம் கரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடக்க வீரராகக் களமிறங்கி 10 பந்தில் 20 ரன் விளாசிய கரன், 2.2 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த சிறப்பான ஆட்டத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கேல், சாம் கரன் சிறுவனாக இருந்தபோது தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போதைய படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : West Indies, Chris Gale
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...