×

மோடிக்கும் இதே தான்..பாஜ இளைஞரணி தேசிய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம்

பாஜகவின் கட்சி அலுவலகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம். நாங்கள் எல்லோரும் போனில் வைத்திருக்கும் வாசகமே?. நேசன் பர்ஸ்ட், பார்ட்டி நெக்ஸ்ட்.. செல்ப் லாஸ்ட் என்று தான் இருக்கும். இது எங்கள் தாரக மந்திரம். இதை தான் அத்வானியும் சொன்னார். எங்களுடைய பாலிசியில் 100 சதவீதம் அத்தனை பேரின் ஒப்புதலுடன் தான் ஒரு  முடிவு எடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், அடுத்த தலைமுறைக்கு  நாங்கள் வழிவிட வேண்டும் என்பது தான். இன்றைக்கு அத்வானிக்கு 100 சதவீதம்  சீட் கொடுக்க தயாராக இருந்தார்கள். எந்த தொகுதியை வேண்டும் என்றாலும்  தேர்வு செய்து கொள்ளலாம் என்று  வீடு தேடி போய் அத்வானியிடம் மோடி கேட்கிறார். முடியாது என்று சொல்லி விட்டார் அத்வானி. அத்வானியின் மகளிடம் நீங்கள் தேர்தலில் நீக்கிறீங்களா? என்றும்  வீடு தேடி போய் மோடி கேட்டார். அதற்கு அத்வானி திருப்பி சொன்னார். என்ன சொன்னார் என்றால், “ குடும்பம் சார்ந்து  இருக்கக்கூடிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். எனக்கு  அப்புறம் எனது குடும்பம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

எனவே அப்படி  எதுவும் சீட் வேண்டாம். அடுத்த தலைமுறைக்கு வரட்டும். புதிய புதிய  தலைவர்கள் இருக்கிறார்கள். வயது கம்மியான தலைவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு சீட் கொடுங்கள்” என்று அத்வானியே கூறினார். 92 வயதுக்கு ஆனதுக்கு பிறகு, அவரது யோசனையே அடுத்த ஜெனரேசன் வர வேண்டும் என்பது தான். மோடி, அமித்ஷா வந்த பிறகு அத்வானியை ஒரங்கட்டியதாக கூறப்படுவது 100 சதவீதம் கிடையாது. இருக்கிறதிலேயே அதிக ஜனநாயகத்தோட கட்சி நடத்துறதே பாஜக தான். அத்வானி ஒதுங்கி விடவில்லை. தூக்கி விடுகிறார். அத்வானியை தூக்கி விட்டவர் தான் நரேந்திர மோடி. அத்வானி தூக்கி விட்டது தான் சிவராஜ் சிங் சவுகான், அத்வானி தூக்கி விட்டவர் தான் தர்மேந்திர பிரதான். இப்படி லிஸ்டை சொல்லி கொண்டே இருக்கலாம்.

அடுத்த ஜெனரேசன் வந்து விட்டது. நரேந்திர மோடிக்கும் அது தான். ஒரு வயது வந்த பிறகும் அவரும் அடுத்த ஜெனரேசனுக்கு வழிவிடுவார். அத்வானி போட்டியிட வில்லை என்று சொன்ன பிறகு தான் அந்த தொகுதியில் அமித்ஷா நிற்கிறார். அடுத்த தலைமுறை செயல்படுவதை நான் பார்க்க வேண்டும் என்கிறார். அவர் அறிக்கை விட்டார் என்பது பொய். திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.   ஏதாவது ஒரு இடத்துக்கு நரேந்திரமோடியே வந்தாலும், நரேந்திர மோடி வாழ்க என்று சொல்ல மாட்டோம். அமித்ஷாவே வந்தாலும், அமித்ஷா வாழ்க என்று ெசால்ல மாட்டோம். பாரத் மாதாவுக்கு ஜெ என்று ஒரு பொதுவான வார்த்தையை தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு துதிப்பாடலும் எங்களுக்கு கிடையாது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,AB Muruganantham ,Babu , Modi, BJP, Youth Vice President, AP Muruganantham
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...