×

நான் போட்டியிடவில்லை: விலகினார் சுமித்ரா மகாஜன்

மக்களவை சபாநாயகராக இருப்பவர் சுமித்ரா மகாஜன். இவர் மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மக்களவை தொகுதியில் இருந்து பாஜ சார்பில் முதல் முறையாக 1989ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். ெதாடர்ந்து 8 முறை எம்பி தேர்தலில் வெற்றி பெற்றவர். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜ ஆட்சிக்கு வந்தபோது இவர் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் கட்சி தலைவர் அமித்ஷா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, 75 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை பாஜ கொண்டுள்ளதால் எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை’ என்று தெரிவித்தார். இந்நிலையில், சுமித்ரா மகாஜனுக்கு அடுத்த வெள்ளிக்கிழமை 76 வயது பிறக்கிறது. இதனால், தனக்கு இந்த தேர்தலில் கட்சி டிக்கெட் வழங்குமா, வழங்காதா என்ற சந்தேகத்தில் இருந்தார்.

அதற்கேற்றார் போல் பல கட்டமாக பாஜ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்தூர் தொகுதிக்கான பாஜ வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கவில்லை. எனவே, கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தாத வகையில், ‘‘இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை’’ என நேற்று மகாஜன் அறிவித்தார். அதே நேரத்தில் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவதுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், கட்சி இந்தூர் தொகுதிக்கான வேட்பாளரை உடனே அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sumitra Mahajan , Sumitra Mahajan,bjp
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...