×

உலக மகா நடிப்புடா சாமி!: ஹைடெக் பேபி ஹேமாமாலினி கலக்கல்

உபி.யின் மதுரா தொகுதி பாஜ எம்பியான நடிகை ஹேமாமாலினி (70), இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுக்கு முன், பிரசாரத்துக்கு வந்து  வாக்குறுதிகளை அள்ளி வீசியதோடு சரி... பின்னர் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காத இவர் மீது மக்கள் கடுப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில், இம்முறை இவரது பிரசார யுக்தி கடும் கேலி, கிண்டலாகி உள்ளது. தனது விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் காரில், மேற்பகுதி கதவு வழியாக தலையை வெளியில் நீட்டியபடி பிரசாரத்துக்கு வருகிறார். அந்த காரில் ஒருவர் தொங்கியபடி, ஹேமாமாலினி மீது வெயிலே படாதபடி பெரிய குடை ஒன்றை பிடித்தபடி செல்கிறார். சொகுசு காரில் வருவதைப் பற்றி சிலர் விமர்சித்ததால், திடீரென நேற்று வயலில் களமிறங்கி டிராக்டரில் போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார் ஹேமாமாலினி. அங்கும் அந்த குடை ஆசாமி அவரை பின்தொடர்ந்தே வந்தார். உதவியாளர் குடைபிடிக்க, வெயிலே படாமல் ஹேமாமாலினி நாத்து நட்ட காட்சிகள் அங்கிருந்தவர்களுக்கு குபீர் சிரிப்பை வரவழைத்தது.டிராக்டரில் ஹேமாமாலினி அமர்ந்தபடி போஸ் கொடுத்ததை பார்த்த பலரும், தேர்தலுக்காக இப்படி எல்லாம் அப்பட்டமா நடிக்கிறாரே என நொந்து கொண்டனர்.

சைடுல என்னப்பா ஏர்கூலரா...?
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஒருபடி மேலே போய், ‘‘அதென்னப்பா, டிராக்டர்ல சைடுல 2 டிரம்ஸ் இருக்கு. தயவுசெஞ்சு அது ஏர் கூலர்னு மட்டும் சொல்லிராதீங்க. என்ன ஒரு பேன்ஸி
டிராக்டர்’’ என நக்கலாக பதிவிட்டுள்ளார். இதப்பத்தி ஹேமா கொஞ்சமும் கவலைப்படவில்லை. ‘‘ஆமா நடிப்புதான். தேர்தலுக்காக நடிக்கிறேன். உங்களுக்கென்ன? மக்கள் ரசிக்கிறாங்கல்ல’’ என்கிறார் சன்கிளாசை தூக்கிவிட்டபடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : world ,actress , Bjp MP, Hi-Tech Baby, Hemalini
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...